Friday, January 20, 2006

என்னுடைய தலாணி!!

நான் இங்க எழுதி நிறைய நாளாச்சு. அம்மா ஏதாவது இங்க எழுதுவமா என்று கேட்டார். நான் இண்டைக்கு என்ர குட்டி தலாணியைப்பற்றி (தலையணை / pillow) சொல்லப் போறன்.

அந்த குட்டி தலாணி எனக்கு நல்ல விருப்பம். அது எனக்கு அம்மம்மா நான் பேபியா இருந்த நேரம் இங்க நோர்வேக்கு கொண்டு வந்து தந்தவர்.

இந்த குட்டி தலாணி அம்மா சிறீலங்காவில, சின்னப் பிள்ளையாய் இருந்த நேரம் படுத்தவராம். அம்மா பிறந்த நேரம் அம்மம்மா இந்த தலாணி தைச்சு அம்மாவுக்கு குடுத்தவர். அதுக்கு இரண்டு தலாணி உறையும் (pillow covers) உம் தைச்சு கொடுத்தார். அந்த உறையும் எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறார். ஒரு உறையில ஒரு வீடும், தண்ணியும் இருக்குது. ஆனால் அதுல தையல் எல்லாம் காணாமல் போச்சு. ஆனாலும் அந்த உறையும் எனக்கு நல்ல விருப்பம்.

நான் இப்ப பெரிய பிள்ளை எண்டபடியால், பெரிய ஒரு தலாணியில படுப்பன். ஆனால், இந்த குட்டித் தலாணியும் எப்பவும் பக்கத்துல வச்சுக் கொண்டு படுப்பன். இரவில அம்மாவோட கிட்டவா போய்ப் படுக்கும்போது, இந்த குட்டித் தலாணியில படுப்பன்.

(ஏனோ படங்களை இன்றைக்கு இணைக்க முடியவில்லை. அதனால் கீழே லிங்காக கொடுத்திருக்கு)

நானும் தலாணியும்

15 comments:

said...

ஐயா! இது தான் அந்த தலாணியா?
நல்லாதான் இருக்கு. கவனமா வைத்திருங்கள். நீங்கள் வளர்ந்ததும் மற்றவர்களுக்கும் காட்டுங்கோ.


றெனி அங்கிள்.

said...

அஞ்சலி குட்டிம்மா, உங்க குட்டித்தலையணைக்கு இவ்வளவு வரலாறு இருக்கா? தலைமுறை தலைமுறையா வாற தலையணை...ம்.ம்...நல்லாயிருக்கு உங்க படம். அம்மம்மாவை கேட்டதா சொல்லுங்க. உங்க மழலை மொழியில் தலையணை மாறி தலாணியாகிருக்கிறது நல்லா இருக்கு :D

said...

நான் வளர்ந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிய ஆளா வரும்வரைக்கும் வச்சிருப்பேன். :)

said...

அஞ்சலி, தொடர்ந்து எழுதுங்கள். மாமனின் வாழ்த்துகளும் முத்தங்களும்

said...

நன்றிகள் செந்தில் மாமா.

said...

Romba nallu iruukirathu ungal ezhuththu! Appadiye enathu vithyaasamaana blog ai paarungalen! Puthiya oru Idea Kidaikkum thaanE!
http://osai.wordpress.com

Thodarattum ungal Ezhuththuppayanam.

Chella Uncle from Coimbatore, India

said...

Romba nallu iruukirathu ungal ezhuththu! Appadiye enathu vithyaasamaana blog ai paarungalen! Puthiya oru Idea Kidaikkum thaanE!
http://osai.wordpress.com

Thodarattum ungal Ezhuththuppayanam.

Chella Uncle from Coimbatore, India

said...

நன்றி செல்லா அங்கிள்.

said...

அஞ்சலி பபா, ஏன் எழுதுவதில்லை. படிப்பில் நேரம் செலவழிகிறதா ?

said...

அஞ்சலி பபா, ஏன் எழுதுவதில்லை. படிப்பில் நேரம் செலவழிகிறதா ?

said...

எழுதத்தான் விருப்பம். அம்மாவும் கொஞ்சம் busy யாக இருந்து விட்டார். விடுமுறையில் எழுதலாம் என்று இருந்தோம். ஆனால் பிறகு ஊர் சுற்ற ஜேர்மனிக்கு போய் விட்டோம். அங்கே பார்த்த சில இடங்கள் எழுதி வைத்திருக்கிறேன். அம்மாவுக்கு நேரம் கிடைக்கும்போது, படங்களும் சேர்த்து, இங்கே போட்டுத் தருவாராம்.

said...

உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்

said...

சம்மர் வெக்கேஷன் பதிவுகள் போட்டிருக்கேனே, பார்க்கலையா?

said...

அஞ்சலி!
தமிழ்மணத்தில் எழுதும்;வயதில் குறைந்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் ,என நினைக்கிறேன். உங்கள் தலாணிச் சரித்திரம் சுவையாகவுள்ளது. நானும் சிறுவனாக இருந்தபோது இப்படிப் பூப்போட்ட உறை போட்ட தலையணையில் படுப்பேன். அது ஒரு "செம்பருத்திப்பூ";என தான் ஞாபகமிருக்கிறது.நீங்கள் தமிழ் எங்கே? படித்தீர்கள் ஈழத்திலா??,.தொடர்ந்து எழுதவும்.
யோகன் பாரிஸ்

said...

நான் பிறந்தது நோர்வேயில்தான். இங்கேயே, சனிக்கிழமைகளில் நடக்கும் தமிழ் ஸ்கூலுக்குப் போறேன். வீட்டில் அப்பா, அம்மாவுடன் தமிழில் கதைக்கிறேன். இலங்கைக்கு அநேகமாக ஒவ்வொரு வருஷமும் போவோம். அங்கே எல்லோருடனும் தமிழில்தானே கதைக்கிறேன். அதனால் தமிழ் தெரியும்.