நான் தியேட்டருக்குப் போய் Happy Feet படம் பார்த்தேன். அது நல்ல ஒரு படம்.
அந்த படத்துல March of the Penguins ல மாதிரி நிறைய emperor penguins எல்லாம் வந்தது. அது Antarctica ல நடக்குது. அதுல ஒரு girl penguin பாட்டு பாட, ஒரு boy penguin உம் பாட்டுபாடி ரெண்டு பேரும் பிறகு marry பண்ணினாங்க. அவையளுக்கு முட்டையும் வந்தது. பிறகு அம்மா penguin சாப்பாடு எடுக்க போய்ட்டுது. அப்பா penguin அந்த முட்டையை வைச்சிருந்தது. அப்ப எல்லா முட்டையும் உடைஞ்சிட்டுது, ஆனா இந்த முட்டை மட்டும் உடையேல்லை. பிறகு அது கொஞ்ச நேரம் போய்த்தான் உடைஞ்சுது. அவர் மத்த penguin குஞ்சுகளை விட different ஆ இருந்தார். அவர் காலில 'டக் டக் டக்' எண்டு tap danse ஆடினார். அப்ப அப்பா கேட்டார் ஏன் இப்படி ஆடுறார் எண்டு. அவர் Happy யா இருந்த படியால, அப்படி danse ஆடினார். அவருக்கு பேர் Mumble.
அப்பா அவரை குளிராமல் இருக்க தன்ரை காலுக்குள்ள வரச் சொன்னார். Beak ஆல குத்தாம கவனமா வரச் சொன்னார். ஆனா அவர் beak ஆல அப்பாக்கு குத்திக் கொண்டு போனார். அப்பாக்கு வலிச்சுது.
பிறகு அம்மா வந்தா. அப்ப, அப்பா அவரை காலுக்குள்ள தேடினார். ஆனா அவர் முதலே அம்மாவை தேடி ஓடிட்டார். பிறகு அம்மாவை கண்டு, கூப்பிட்டு, hug பண்ணிச்சினம்.
மத்த குஞ்சுகள் பாடுற மாதிரி, இவருக்கு பாட முடியேல்லை. ஆனா அவர் நல்லா danse ஆடினார். அவருக்கு பாட தெரியேல்லை எண்டு எல்லாரும் அவரை வேண்டாம் எண்டு சொல்லிட்டினம். அவங்கட boss Noah அவரை போகச் சொல்லிட்டார். அவர் பாவம்.
Penguins மீன்தானே சாப்பிடுவாங்க. அவங்களுக்கு மீன் எல்லாம் கடலில குறைஞ்சிட்டுது. அது ஏன் குறைஞ்சுது எண்டு கண்டு பிடிக்க Mumble போனார்.
Mumle க்கு பிறகு வேற சின்ன penguin friends கிடைச்சாங்க. பிறகு அவையள் ஒரு Lovelace எண்ட penguin ட்டை கேள்வி கேக்க போனாங்க. அந்த Lovelace penguin கழுத்துல ஒரு chain மாதிரி போட்டிருந்தார். அவருக்கு ஒரு stone குடுத்துட்டு ஒரு கேள்வி கேக்கலாம். அவரை guru எண்டு எல்லாரும் சொன்னினம். Mumble கேட்ட கேள்விக்கு அந்த Lovelace க்கு பதில் சரியா சொல்ல தெரியேல்லை.
பிறகு அந்த Love lace க்கு கழுத்துல அந்த lace இறுக்கியிட்டுது. அவருக்கு கஷ்டம் வந்திட்டுது. அவருக்கு அந்த lace, aliens இருக்கிற இடத்துலதான் கிடைச்சுது எண்டு சொன்னார். அவரை Mumble உம் friends உம் கூட்டிக் கொண்டு போனாங்க. Aliens எண்டு அவங்க சொன்னது ஆக்களைத்தான். ஆக்கள் இருக்கிற ஒரு village பக்கம் அவங்க போனாங்க. அங்க whale வந்து அவங்களை சாப்பிடுற மாதிரி தூக்கிப் போட்டு விளையாடிச்சுது. அப்ப அந்த கழுத்துல lace மாதிரி இருந்ததும் கழண்டுட்டுது. பிறகு அந்த Lovelace அந்த whales க்கு பேசிப் போட்டு போனாங்க.
பிறகு friends ஐ வீட்டுக்கு போகச் சொல்லியிட்டு, Mumble மட்டும் jump பண்ணி, jump பண்ணி ஒரு கப்பலை திரத்திக் கொண்டு போனார். அந்த கப்பலில இருந்து மீன் பிடிச்சாங்க. அந்த மீனை அவர் இழுத்துப் பார்த்தார். அவருக்கு இழுக்க முடியேல்லை. அவர் பிறகும் திரத்திக் கொண்டு, ஒரு பெரிய town க்கு வந்திட்டார். அங்க அவரை ஆக்கள் பிடிச்சு, aquarium ல போட்டுட்டினம். அவர் கவலையா இருந்தார்.
பிறகு ஒருநாள் ஒரு சின்னப் பிள்ளை கண்ணாடியில 'டொக் டொக்' எண்டு தட்ட, Mumble உம் காலில தட்டி தட்டி danse ஆட தொடங்கிட்டார். எல்லா ஆக்களும் அதை வந்து பாத்தாங்க. Mumble கதைக்கிறது அவங்களுக்கு விளங்கேல்லை. ஆனால் அவர் danse ஆடி ஏதோ சொல்லுறார் எண்டு அவங்களுக்கு விளங்கிச்சுது. அவருக்கு ஒரு sensor போட்டுவிட்டு, அவரை அவரின்ரை இடத்துக்கு அனுப்பினாங்க. அவர் திரும்பி வந்து எல்லாருக்கும், மீன் பிடிக்கிறது ஆக்கள்தான் எண்டு சொன்னார். பிறகு எல்லாரும் சேர்ந்து danse ஆடினாங்க. பிறகு helicopter ல ஆக்கள் வந்திச்சினம். அவையள் வந்ததும் அந்த Noah உம் சேர்ந்து ஆடினார். வந்த ஆக்களும் ஆடிச்சினம். அதுல ஒரு ஆள் விழுந்திட்டார். நல்ல Funny ஆ இருந்துது. ஆக்களுக்கு Penguins danse ஆடி சொன்னது விளங்கிட்டு. இனிமே நிறைய மீன் பிடிக்க கூடாது எண்டு எல்லா cities லயும் சொல்லிட்டினம். Mumble விடாம கஷ்டப்பட்டு அவங்கடை சாப்பாட்டை ஆக்கள் நிறைய எடுக்காம பாதுகாத்திட்டார்.
பிறகு Penguins எல்லாம் நல்ல happy யா இருந்தினம். Happy Feet ஆலதான் எல்லாருக்கும் Happy வந்தது.
Monday, January 01, 2007
Happy Feet!!
Posted by அஞ்சலி
at
6:09 PM
Labels: பார்த்த படம்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
அஞ்சலி நல்லா இருக்கு ஆனா.. இடைக்கிடை இருக்கும் ஆங்கில சொற்களை முடிந்தளவுக்கு தமிழ்ப்படுத்தி எழுதுங்கோவன்
நன்றி நிலவன் அங்கிள். அம்மாட்ட கேட்டு எழுதுறன்.
அஞ்சலியின் அம்மா எழுதுவது....
நன்றி நிலவன்.
இங்கே அஞ்சலி சொல்வதை அப்படியே தட்டச்சு செய்வது நான்தான். சிலர் சொல்கிறார்கள் ஆங்கிலச் சொற்களையும் தமிழில் எழுதும்படி. வேறு சிலர் சொல்கிறார்கள், அஞ்சலி எப்படி சொல்கிறாவோ, அப்படியே தட்டச்சு செய்யும்படி. அஞ்சலி சொல்லும்போது ஆங்கிலச் சொற்களும் கலந்து சொல்வதால் நான் அப்படியே தட்டச்சு செய்கின்றேன். சொல்லும்போது, முழ்க்க முழுக்க தமிழில் சொல்வதில்லை. பார்க்கலாம், முயற்சி செய்து கூடியளவு தமிழ் சொற்களை அவளுக்கு சொல்லிக் கொடுத்து தட்டச்சு செய்யப் பார்க்கிறேன்.
நல்ல படம். நானும் பார்த்தேன், இது பத்தி பதிவு போட நினைச்சேன். நீங்க முந்திட்டீங்க :))
அஞ்சலி, உங்களுக்குப் படம் பிடிச்சிருக்குன்னு தெரியுது..ஆனா, எனக்கு இன்னும் கதை சரியாப் புரியல..நானும் படம் பார்த்துட்டு சொல்றேன்..monsters inc., toy story, finding nemo இது எல்லாம் எனக்குப் பிடிச்ச animation படம்.
திரு அங்கிள் நான் முதல் படம் பார்த்தேன். அதால நான் முதல் எழுதியிட்டன். நீங்களும் எழுதுங்கோ. நான் வாசிக்கிறேன். :)
அஞ்சலி, படத்தை நல்லா ரசித்து இருக்கீங்கன்னு தெரியுது...நல்ல விமர்சனம்..
நானும் படம் பார்த்தேன்..எனக்கு இந்த படம் ஓ.கே ரகம் தான்..சும்மா சும்மா பாட்டு பாடறத குறைத்து இருக்கலாம்...
finding nemo ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்..அதான்!
அஞ்சலி, நேத்து தான் நான் இந்தப் படம் dvdல பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு..இப்ப நீங்க சொன்ன கதையும் புரியுது. அது ஏன் dance-அ danseனு எழுதி இருக்கீங்..நார்வே மொழியில் danse ஆ?
குழந்தைகளோடு அமர்ந்து பெரியவர்கள் ரசிக்கவேண்டிய படம் இது...!!!!
செந்தழல் ரவி
அஞ்சலியின் அம்மா எழுதுகின்றேன்...
ரவிசங்கர்!
Dance க்கு நோர்வேஜிய மொழியில் danse என்பது சரிதான். ஆனால் உச்சரிப்பு வேறுபடும். 'டான்ஸ்' என்பதுக்கு பதிலாக 'டான்ஸ' என்று சொல்வார்கள். அஞ்சலி சொன்னது டான்ஸ் என்றுதான். நான்தான் தவறுதலாக நோர்வேஜிய மொழியில் எழுதி விட்டேன். இப்படி கிட்டத்தட்ட ஒரே விதமான எழுத்துக்கள் வரும் சொற்களில் இப்படி தவறுகள் விடுகின்றேன். :(
Post a Comment